/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
மகாத்மா காந்தி
/
"அவன்' பார்த்துக் கொள்வான்
/
"அவன்' பார்த்துக் கொள்வான்
ADDED : ஏப் 09, 2013 10:04 AM

* உண்மை இருக்கும் இடத்தில் தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.
* தவறை மன்னிக்கும் குணம் ஒருவனின் உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது.
* பிரார்த்தனை என்பது தன்னடக்கம் நிரம்பியதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.
* உங்களுடன் பேசாதவர்களிடமும், முகம் கொடுத்துப் பேச முற்படுங்கள்.
* நல்ல நண்பனைப் பெற விரும்பினால், நீங்களும் நல்ல நண்பனாக இருக்கப் பழகுங்கள்.
* நம் எண்ணம் முழுவதையும் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், அந்த வினாடியே நமக்கு விடுதலை கிடைத்து விடும்.
* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால், நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.
* இதயத்தில் தூய்மையுடன் செய்யும் வழிபாடு, தியானத்தை கடவுள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.
* எவ்வளவு குழப்பம் நேர்ந்தாலும், பொய் ஒருநாள் காணாமல் போகும். உண்மையோ என்றென்றும் நிலைத்து நிற்கும்.
- காந்திஜி